சித்திரவில்லி பண்ணையார்கள்/ கத்திக்காரர்கள்( மீண்டெழும் சேரர் வரலாறு)
முன்னுரை பண்டைய காலத்தில் தமிழகம் மூவேந்தர்களான சேர சோழ பாண்டியர்களால் ஆண்டதை நான் அறிவோம் . முற்கால சேரர்கள் கி. பி 3 நூற்றாண்டு வரை கருவூரை தலைநகராக கொண்டு இன்றைய கேரளா முழுவதும் ஆட்சி புரிந்து வந்தார்கள். பிறகு சேர நாடு பல துண்டுகளாக உடைந்து பல சிற்றரசுகள் தோன்றின. இன்றைய கோழிக்கோடு எற நாடு என்றும் கரூர் பகுதியை கொங்கு சேரர்கள் என்றும் தலைக்காடு , மைசூர் பகுதிகளை கொங்கணிவர்மன் மாதவ என்றும் மன்னன் மேலை கங்க அரசாங்கத்தை தோற்றுவித்தான். மேலும் வேணாடு, குட்டநாடு, தென்பாண்டி நாடு ஆகிய கொடுந்தமிழ் மண்டிலங்களையும் (இன்றைய கேரளா) சேரன் ஆண்டான். தலைநகர் கரூர் வஞ்சி. இது ஆண்பொருணை (அமராவதி) ஆற்றின் கரையிலுள்ளதாகச் சங்க இலக்கியங்கள் கூரும். கள்வனான சேரர்கள் சேரர் கல்வெட்டுகள் " சந்திராதித்ய குல திலக " என்றும் அரசன் பெயருக்கு முன்னால் குறிப்பிட்டுள்ளனர் கி.பி.9 ம் நூற்றாண்டில் இறுதிவாக்கில் கோயம்புத்தூர் மாவட்டம் பொன்னிவாடி கிடைத்த கல்வெட்டு ஒன்று 1. ஸ்வஸ்தி ஸ்ரீ சந்த்ராதித்ய குல திலகன் சா 2. ர்வ பௌமன் கலிநிருவ (ப) கள்வனா இன கோ 3. க்கண்...