சித்திரவில்லி பண்ணையார்கள்/ கத்திக்காரர்கள்( மீண்டெழும் சேரர் வரலாறு)
முன்னுரை
கள்வனான சேரர்கள்
சேரர் கல்வெட்டுகள் "சந்திராதித்ய குல திலக" என்றும் அரசன் பெயருக்கு முன்னால் குறிப்பிட்டுள்ளனர்
கி.பி.9 ம் நூற்றாண்டில் இறுதிவாக்கில் கோயம்புத்தூர் மாவட்டம் பொன்னிவாடி கிடைத்த கல்வெட்டு ஒன்று
இந்த கல்வெட்டில் கோக்கண்டன் ரவி எனும் மன்னன் தன்னை சேரனின் குலத்தவனாக "சந்த்ராதித்ய குல திலகன்" என்று கூறுகிறான்.
மேலும் "கலிநிருவ கள்வனாயின கோக்கண்டன்ரவி" என்ற தொடரின் மூலம் தன்னை "கள்வர்" குலத்தினன் என்றும் தெரிவிக்கிறான்.
8ம நூற்றாண்டில் சேர நாட்டில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. யூதர்கள் அகதிகளாக வந்து இறங்கினர். நம்பூதிரிகள் ஆதிக்கம் அதிகரித்தது. பல சிற்றரரசர்கள் ஆட்சி தோன்றின. ஆதிசங்கரர் காலத்தில் இந்து மதம் மேலோங்கி இருந்தது. சாதி வேறுபாடுகள் தலைத்தோங்கி இருந்தது. பூர்விக சேரர்கள் தங்கள் அடையாளத்தை இழந்தனர்.
சோழர்கள் எழுச்சி
கி. பி 871ஆண்டு விஜயாலய சோழன் தஞ்சையை கைப்பற்றி சோழ சாம்ராஜ்யத்தை நிறுவினான். அவனுக்கு பக்க பலமாக இருந்தது சேரர் கிளைகுடியினரான பழுவேட்டரையர் மற்றும் மழவர்கள்.
பராந்தக சோழன் காலத்தில் இரவி வில்லி என்னும் சேர நாடு இளவரசி( சேர மன்னர் விஜயராகவதேவ மகள்) கோவிலுக்கு தானம் அளித்ததை கல்வெட்டு உறுதி படுத்துவதன் மூலம் சேர நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் பெண் எடுத்து பெண் கொடுக்கும் நல்ல உறவு இருந்தது தெரிகிறது
In the 29th year of Parantaka I, one Iravi Villi, daughter of the Chera king Vijayaraghava-deva, made a gift of gold for a lamp to the Mahadevar of Tiruvorri-yur. This is one more instance of the friendly contacts between the Cholas and the Cheras in the days of Parantaka I.
காந்தளூர் சாலை போர்
கொடுங்களூர் சேரர்கள் சோழர்களுக்கு உதவியாக இருந்த அதே வேளையில் தமிழகத்தின் தென் பகுதியில் இன்றைய திருவனந்தபுரம் பகுதிகளை பாஸ்கர இரவிவர்மன் என்கிற சேர மன்னன் ஆட்சி செலுத்தினான். இவன் காலத்தில் அந்நியர்கள் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. பெயர் அளவில் பாஸ்கர இரவிவர்மன் அரசனே தவிர கேரள கடற்பரப்பு மற்றும் போர்கலைகளை பயிற்றுவிக்கும் சாலையாக காந்தளூர் சாலை முற்றிலும் நம்பூதிரிகள் கட்டுப்பாட்டில் இருந்தது.
தன சகோதரன் ஆதித்ய கரிகாலன் மரணத்துக்கு காந்தளூர் சாலையில் பயிற்சி கொடுக்கும் ஆசான்களுக்கும் தொடர்பு உண்டு என்று உறுதியாக நம்பிய ராஜராஜன் சோழன் காந்தளூர் சாலை போரை தொடங்கினான். கொடுங்களூர் சேரர்கள் , கொங்கு சேரர்கள் படைதளபதிகளாக சென்று வெற்றி தேடி தந்தார்கள். குமரி மாட்டம் கோட்டாறு சோழர் நிலைப்படை ஒன்றை நிறுவினான் ராஜேந்திர சோழன். காந்தளூர் சாலை மட்டும் இன்றி ராஜேந்திர சோழன் அந்நிய படையெடுப்பில் சோழ கங்கர்களும் கொங்கு சேரர்களும் பெரிய அளவில் உதவினார். பண்ணை தீவை வென்ற கள்ளர் குல தளபதிகளுக்கு "பண்ணையார்" என்று பட்டம் சூட்டி மகிழ்ந்தான் ராஜேந்திர சோழன்.
சோழர் ஆட்சியில் நாஞ்சில் நாடு முழுவதும் சோழர் அடையாளங்கள் காணப்பட்டது. மன்னன் ராஜராஜன் பெயரால் ராஜராஜபெருஞ்சாலை உருவாக்கப்பட்டது . வாரியூர் உப்பளங்கள் "ராஜேந்திர சோழன்" பெயரான "மஹிபால குல காலன்"(வங்காளத்தை ஆண்ட மகிபாலனை அழித்த எமன்) என்று பெயர் சூட்டப்பட்டது.
பண்ணையார் முதல் கல்வெட்டு
............. பொன் பற்றி உடையான் கண்டனான ...
"அழகிய சோழ சித்திரவில்லியும் ,
உய்யுங்கொண்ட சோழ சித்திரவில்லியும்
கண்டராதித்த சித்திரவில்லியும்"
இத்தேவர்க்கு திருநுந்தா விளக்கஇரண்டுக்கும்..................
கல்வெட்டு செய்தி: பொன் பற்றி உடையான் என்பது சேரர் கிளைக்குடிகளான மழவர்களை குறிக்கும். இவர்கள் அழகிய சோழன் , உய்யங்கொண்ட சோழ என்று ராஜ ராஜ சோழனின் பட்ட த்தையும் , கண்டராதித்தன் என்னும் சோழ மன்னன் பட்டத்தையும் உபயோகித்து இருப்பதால் இவர்கள் அரசனுடைய படை தளபதிகள் என்பது ஊர்ஜிதம் ஆகிறது. மேலும் இத்தேவர்களுக்கு விளக்கிரெண்டும் என்று வருவதால் இவர்கள் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் என்பது தெரிகிறது. மேலும் வில்லி என்பது சேரர்கள் பட்டமாகும். அவ்வையார் தான் எழுதிய ஆத்திசூடியில் சித்திர வில்லி என்று குறிப்பிடுகிறார்.
இரண்டாம் கல்வெட்டு
இந்த கல்வெட்டை மிகவும் கவனமாக படிக்கவில்லை என்றால் பொருள் மாறி விடும். அமராவதி மங்களத்து பொன் பற்று உடையான் என்றால் இன்றைய கரூர் பகுதியை அமராவதி மங்களம் என்று கூறுவர்.இது ஒரு காலத்தில் சேரர் தலைநகரமாக இருந்ததை ஏற்கனவே பார்த்தோம். "இரண்டாயி"என்று வருவதால் அந்த விளக்கு குருகுலராயனே கேரள சித்திரவல்லி அணி சார்பாக கொடுத்தது உறுதியாகிறது. குருகுலராயனே ஒரு அரையன். அவன் கேரள சித்திரவல்லி சார்பாக இருந்திருக்கிறான் என்றால் கேரள சித்திரவல்லி யார் என்பது அடுத்த கல்வெட்டில் தெளிவாக காணலாம்
கல்வெட்டு 3: இடம் திருச்சி ஸ்ரீரெங்கம்
கல்வெட்டு செய்தி: 12ஆம் நூற்றாண்டில் சோழர் ஆட்சி மறைந்து பாண்டியர் எழுச்சி பெற்றனர்.(ராஜேந்திரசோழனின் மகன்களை(சடையவர்மன் சுந்தர சோழபாண்டியன்) தான் பாண்டிய நாட்டில் ஆளுநராக(chola pandiya viceroy) நியமித்தான். இவர்கள் தான் பிற்காலத்தில் குலோத்துங்க சோழன் வாரிசோடு பாண்டியர்களாக போரிட்டார்கள் என்று ஒரு கருத்தும் உண்டு). திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் அய்யன் குலசேகர பாண்டியன் நலம் பெற இரண்டாவது மகன் வீரபாண்டியன் குலசேகர சந்தி நடத்துகிறான். இதற்கான ஆன செலவுக்காக கேரள சித்திரவல்லி என்று அழைக்க படும் கோட்டைக்கரை (இன்றைக்கு குமரி மாவட்ட மருங்கூர் )அருகே உள்ளது வரிவிலக்கு அளிக்க படுகிறது . காந்தளூர் சாலை போருக்கு பிறகு சோழர்களுக்கு உதவிய கொடுங்கல்லூர் சேரர்கள் வேணாடு என்னும் ராஜ்யத்தை உருவாகியிருக்கலாம். வேணாடு அரசர்கள் சோழர் ஆட்சிக்கு பின் பாண்டியர்களுக்கு (chola pandia viceroy)நட்பு பாராட்டினர். வேணாடு அரசன் இரவிவர்மன் குலசேகரன் பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனுக்கு மருமகன் ஆவான். குடந்தை சேதுராமன் தன்னுடைய LATER PANDYAS நூலில் " CHITTIRAVALLI is named after the venad king Ravivarman kulasekharan" ( சித்திரவல்லி கேரள அரசன் ரவிவர்மன் குலசேகரன் பெயர் ) என்று குறிப்பிடுகிறார்.மாலிக் கபூர் படையெடுப்புக்கு பின் மருமகன் வீரபாண்டியனோடு விலை மதிப்பில்லாத பாண்டியன் செல்வத்தை காப்பற்றி திருவனந்தபுரம் அரண்மனையில் வைத்து காப்பாற்றியது இரவிவர்மன் குலசேகரனே. ஆம் திருவனந்தபுரம் அரண்மனை செல்வங்கள் பாண்டியன் செல்வங்களே.
இரவிவர்மன் குலசேகரன் பிறகு சுல்த்தானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்று காஞ்சிபுரம் வரை சென்று வெற்றி கொடி நாட்டினான். இவன் ஆட்சி பாண்டிய நாட்டில் பரவி இருந்தது. பிறகு நடந்தது வரலாற்று குழப்பம். இரவிவர்மனுக்கு பிறகு அவன் வாரிசுகள் ஆட்சிக்கு வரவில்லை. மருமக்க தாயம் முறைப்படி மருமகனே ஆட்சி பிடித்திருக்கலாம் என்று ஒரு கருத்தும் உண்டு. திருச்செந்தூர் பக்கத்தில் உள்ள வீரபாண்டியன் பட்டணத்தில் உள்ள ஒரு பள்ளி வாசல் கல்வெட்டு சேர மன்னன் உதய மார்த்தாண்ட என்று வருகிறது. இதன் காலம் கி. பி 1383.
கத்திக்காரர்:
கத்தி என்ற வார்த்தையை பொதுவாக பூர்விக சேரர்களும் மேலை கங்க மன்னர்களும் தங்கள் பெயருக்கு முன்னால் உபயோகித்து வந்துள்ளனர். கங்க அரசன் 7ம் நூற்றாண்டில் சிவமாரவர்மன் கத்தி அரசன் என்று தன்னை குறிப்பிடுகிறான்.
கங்கர் என்போர் இன்றைய #மைசூர்கோலார் பகுதியை ஆண்ட ஒரு தமிழ் சாம்ராஜ்யம்.போசளர் வலுப்பெற்று இவர்கள் ராஜ்ஜியத்தை பிடித்து விட ..#போசளருக்கு அடங்கிய சிற்றரசர்களாக மாறி விட்டார்கள் கங்கர்கள். திருமண உறவும். வைத்து உள்ளார்கள்.
( எப்போதுமே போசளர் சோழர் கங்கர் இவர்களுக்குள் திருமண உறவு உண்டு).இதில் வரும் கத்திக்கார தெண்ணாயக்கா #மகாபிரதானி என்றும் இவர் ஒரு கங்க அரசன் என்றும் இவர் மகன் சிங்கய தண்ணாயக்க ' #கங்காதேவன்"என்று அழைக்கபடுகிறார்.
தென்னையாக்க என்பது மஹாதண்ட நாயகன் என்பதும் படை தளபதி என்றும் பொருள் படும்
போசள அரசாங்கத்தில் அரசர் அரசி மற்றும் #மகாபிரதானி இவர்கள் கையில் தான் ஆட்சி.
வீர வல்லாள தேவரின் சகோதிரி கணவர் தான் கங்க மன்னர் சோமேய தென்னையாக்க. என்பது போசள அரசாங்கத்தில் முதன்மை படை தளபதி என்று அர்த்தம்.
கர்நாடகாவில் உள்ள சோமநாதபுரம் சென்னகேசவ கோவிலை கட்டியவர் இவரே.
தென்காசி பாண்டியர்கள் காலத்தில் கங்கர்கள் கொங்கு சேரர்கள்
மதுரையை இழந்த பாண்டியர்கள் பிற்காலத்தில் தென்காசியை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்தார்கள். பாண்டியர்களுக்கு படைத்தளபதிகளாக இருந்த கங்கர்கள் சோழ கங்கர் என்றும் பொன் பற்றி உடையான் என்றும் அழைக்கப்பட்டார்கள். இவர்களுடைய கல்வெட்டுக்கள் பெரும்பாலும் வள்ளியூர் , நாங்குநேரி , பண்ணைகுடி( பணகுடி) ஆகிய இடங்களில் கிடைக்கிறது
1. பொன் பற்றி உடையான் காலிங்கராயர்
2. பொன் பற்றி உடையான் காங்கேயன்
#காலிங்கராயர் #காங்கேயன் என்று பட்டம் கொண்ட கங்கர்கள் பிற்காலத்தில் பாண்டியனுக்கு மெய்க்காவலர்களாக இருந்தது வரலாற்று உண்மை.
3. பொன் பற்றி உடையான் அம்பலத்தாடி அழகர்
காலிங்கராயர் பணகுடி( பண்ணைகுடி) பாண்டியன் படை தளபதி

பாண்டியர் மறைவு
பாண்டியர் மறைவு பற்றி பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன .ஐவர் ராசா கதை. இக்கதை 16ம் நூற்றாண்டு இறுதியில் நடைபெற்றதாக வருகிறது. வடுகர் படையெடுப்பில் நான்கு பாண்டியர்களும் இறந்து போனதை இக்கதை உறுதி படுத்துகிறது. கடைசியாக குலசேகர பாண்டியன் வடுக இளவரசியை திருமணம் செய்ய மறுத்து தற்கொலை செய்து கொள்வதாக இக்கதை கூருகிறது. இந்த கதையில் பாண்டியன் மெய்க்காவலகர்களாக காங்கேயன் , காளிங்கன் , வில்லவராயர் , கத்திக்காரர் இருந்ததாக கூருகிறது
சில தகவல்கள் பாண்டியர்கள் தெற்கே குலசேகரப்பட்டினம் வந்து வாழ்ந்ததாக ஒரு தகவல் உண்டு. பண்ணையார்களை பொறுத்து வரை பாண்டியன் குடும்பத்தை குலசேகரப்பட்டினம் அஸ்டகாளி கோவிலில் வைத்து ரகசியமா பாதுகாத்ததாக கூறுவோரும் உண்டு.
பண்ணையார்கள் கத்திக்காரர் தற்போது வசிக்கும் இடம். கோவில் உரிமைகள்( திருச்செந்தூர் கோவில் மரியாதை , வேல் பிடிக்கும் உரிமை , பட்டங்கள்,பாரிவேட்டை( கள்ளர் சடங்கு) மற்றும் குலதெய்வங்கள் பற்றிய கவல்கள் அடுத்த பதிவில்




































மிக அருமை...🔰⚔️🗡️⚔️🔰
ReplyDeleteஅருமை
ReplyDelete